...................... “Yeshua Disciples Church”.......................

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!

பிதாவாகிய யாவே (Yahweh) தேவன் மனித இரட்சிப்புக்காக தம்முடைய ஒரே பேரான குமாரனை “யெஷுவா”(Yeshua) என்ற நாமத்தில் பூமிக்கு அனுப்பினார். (மத்.1:21; 1யோவா.4:14) இரட்சிக்கப்படுவதற்கு அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. (அப்.4:12) “யெஷுவா” என்ற நாமத்திற்கு யாவே இரட்சிக்கிறார் (Yehoshua -hebrew ) என்பது பொருள். “யெஷுவா” என்று அராமிக் மொழியில் நம்முடைய மீட்;பரின் நாமம் உச்சரிக்கப்பட்டது.

பிதாவாகிய தேவன் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன் குறிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் (ரோம.8:29) “யெஷுவா” மெசியாவை (Yeshua messiah) விசுவாசித்து முழுக்கு ஞானஸ்நானத்தில் தேவனோடு செய்த நல்மனசாட்சியின் உடன்படிக்கையை நிறைவேற்றுவதால் தலையாகிய மெசியாவோடு ஒன்றிணைக்கப்படும் அவருடைய சரீரமாயிருக்கிறார்கள். (அப்.8:12; 1பேது.3:21 ; 1கொரி.12:27; மத்.24:13)

“யெஷுவா”மெசியாவை (Yeshua messiah) விசுவாசிக்கிறவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபை (Church) அழைக்கப்படுகிறார்கள். (1தீமோ.3:15) “யெஷுவா”மெசியாவை தேவன் சபைக்கு தலையாக தந்திருக்கிறார். (கொலோ.1:18) யெஷ_வாமெசியாவின் சரீரமான சபையாக இருப்பதற்கு, சபையின் தலையாகவும், பிரதான மேய்ப்பனாகவும், குருவாகவும், போதகருமாகவும் இருக்கும் “யெஷுவா”மெசியாவுக்கு சீஷர்களாக (Disciples) இருப்பது அவசியம். (எபே.5:23; மத்.23:8-10) “யெஷுவா”வை (Yeshua) ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய மெசியா {messiah) என்று விசுவாசித்து அறிக்கையிடுவதே “யெஷுவா”வுக்கு சீஷர்களாய் இருப்பதற்கு தகுதியாகும். (மத்.16:16: அப்.8:37) “யெஷுவா”தம்முடைய சீஷர்களை “சிறுமந்தை” என்று அழைக்கிறர். (லூக்.12:32)

“யெஷுவா”தம்முடைய சீஷர்களுக்கு நீங்கள் புறப்பட்டுப்போய், நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் உபதேசித்து அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து மற்றவர்களைத் தனக்கு சீசராக்கும்படி கட்டளையிட்டார். உலக முடிவு பரியந்தம் சீசர்களோடு இருப்பதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறார். (மத்.28:19-20) பிதா வாக்குத்தத்தம் பண்ணின பரிசுத்தாவி சீஷர்களுக்கு கொடுக்கப்பட்டது முதல் சீஷர்கள் தலையாகிய “யெஷுவா”வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து மெசியாவின் நாமத்தினால் அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்களை “யெஷுவா” மெசியாவுக்கு சீஷர்களாக்கினார்கள். (அப்.2:41)

“யெஷுவா” மெசியாவுக்கு சீஷனாய் இருக்கிறவன் “யெஷுவா”வின் உபதேசத்தை போதித்து மற்றவரை “யெஷுவா”வுக்கு சீஷனாக்க வேண்டும் என்பது வேதம் நமக்கு கற்பிக்கும் கட்டளை. (அப்.10:42-43: அப்.9:18-20) இவ்விதமாக “யெஷுவா”வின் சரீரமான சபை தெரிந்து கொள்ளப்பட்டும் கூட்டி சேர்க்கப்பட்டும் வருகிறது. (எபே.2:20-22) அவ்வாறே உலகத்தின் முடிவு காலத்தில் குறிப்பாக “யெஷுவா”மெசியா மறுபடியும் வரும் நாட்களில் ஜீவிக்கிற நாங்களும் ஒரு சபையாக (கூட்டமாக) ஐக்கியப்பட்டு,“Yeshua Disciples Church”” என்ற பெயரில் சீஷத்துவ ஊழியத்தை செய்து வருகிறோம்.

மேலும் எங்களைப் பற்றி:

• நாங்கள் மற்றவர்களின் பணத்தைப் பெற்று சீசத்துவ ஊழியம் செய்கிறதில்லை. அவரவர் தனக்கானதை தேவனுக்கு அர்பணிப்பு செய்கிறார்கள். • எங்களுக்கென்று “யெஷுவா”மெசியா ஒருவரே எங்கள் தலையாகவும் தலைமையாகவும் இருக்கிறார்.

• வேதமே (Yahweh book) எங்கள் சட்ட புத்தகம். • யாவே தேவனின் பிள்ளைகள் என்பதும் “யெஷுவா”மெசியாவின் சீஷர்கள் என்பது எங்கள் பெருமை. வேறொன்றைக் குறித்தும் பெருமை பாராட்ட இடமில்லை.

• சத்தியத்தை சத்தியமாக போதிப்பதும் ,எழுதுவதும் எங்கள் ஊழியம். பொய்யை கண்டறிந்து பொய் போதகத்திற்கு எதிர்த்து நின்று சத்தியத்திற்கு சாட்சி கொடுப்பதே எங்கள் நோக்கம்.