
நமது விசுவாசம்
- ஒருவரே சாவைமை உள்ளவரும்/ யாராலும் அருகில் நெருங்கி வர முடியாத ஒளியில் வாழ்கிறவரும் / தொடக்கமும் முடிவும் இல்லாமல், அனைத்து உலகங்களையும் ஒரே அதிகாரத்தின் கீழ் ஆளும் அரசராகிய யேகோவா என்னும் பெயர் உள்ள ஒரே உண்மை கடவுளையே விசுவாசிக்கிறோம். (1தீமோ6:15,16 , யாத் 6:3, யோவா 17:3, சங் 68:4, 83:17 )
- அவருடைய ஒரே மகன் பெயர் யெசுவா/ இவரை நமக்கு இளவரசராகவும், மீட்பராகவும், மெசியாவாகவும் கடவுளே ஏற்படுத்தினார் என்றும் விசுவாசிக்கிறோம். ( யோவா 3:16, 1கொரி 8:6 )
- யெசுவா யாராலும் பார்க்க முடியாத கடவுளின் சாயல் / இவரே கடவுளால் படைக்கப்பட்ட முதல் படைப்பு /உலகங்களை எல்லாம் இவர் வழியாய், இவருக்காகவே படைத்து /இவரையே எல்லாவற்றுக்கும் உரிமையாளராக யேகோவாவே நியமித்தார். /படைப்புகள் அனைத்தும் இவராலேயே தொடர்ந்து நிலைத்து இருக்கின்றன என்றும் விசுவாசிக்கிறோம். ( கொலோ 1:15-17, எபி 1:2)
- கடவுள் கொடுத்த மகிமையிலேயே யெசுவா இருக்க நினைக்காமல் / குற்றங்களால் உயிரை இழந்த மனிதர் பேரில் மனதுருகி / தம்முடைய மகிமையான நிலையை விட்டு/ மனிதருக்கு சேவை செய்யும் ஓர் அடிமை போல/ தம்மைத் தாழ்த்தி மனிதனானார். / இவர் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரையே கொடுத்து கடவுளுக்கும் மனிதருக்கும் சமாதானத்தை உண்டு பண்ணினார் என்றும் விசுவாசிக்கிறோம். ( பிலி 2:6-8, மத் 20:28 ரோம 5.1 , கொலே 1.20 )
- கடவுள் குறித்த காலத்தில் , யெசுவா மற்றவர்களின் பாவத்துக்குரிய தண்டனையை தானே ஏற்று, மரணம் அடைந்து / இவரே கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளராகவும்/ திருச்சபையாகிய உடலுக்கு தலையாகவும் இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம். (1 தீமோ2:5-6, கொலோ 1:18)
- ஆதலால் கடவுள் இறந்த யெசுவாவை உயிரோடு எழுப்பி / தனக்கு இருக்கும் உயிர் கொடுக்கும் அதிகாரத்தை யெசுவாவுக்கும் கொடுத்து / எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, தம்முடைய வல்லமையின் வலது பக்கத்தில் அமர்ந்து கொள்ளச் செய்தார் என்றும் விசுவாசிக்கிறோம். (அப் 3:15 , யோவா 5:26, பிலி 2:9, எபே 1:20 -23, எபி 10:12 , 1பேது 3:22)
- யெசுவாதான் வாழும் கடவுளின் மகன் என்றும்,/ அவரே அபிசேகம் செய்யப்பட்டவர் என்றும் / விசுவாசம் வைக்கும் அனைவரும் , மனம் மாறி / யெசுவாவின் இரத்தத்தினாலே / பாவமன்னிப்பாகிய மீட்பு பெறுவதற்காக / அபிசேகம் செய்யப்பட்ட யெசுவாவின் பெயரால் திருமுழுக்குப் பெறும்பொழுது /கடவுளின் பிள்ளைகளாகவும் /யெசுவாவின் சீடர்களாகவும்/ மாறும் உரிமையை/ கடவுளே அளித்தார் / என்றும் விசுவாசிக்கிறோம். ( மத் 16 16 அப்போ 2: 38, எபே 1:7, யோவா 1: 12, மத் 28:19)
- இவ்வாறு திருமுழுக்கு மூலம் யெசுவாவின் சீடர்களாக மாறிய திருச்சபையாருக்கு தம் தந்தை வாக்களித்த / உன்னதத்திலிருந்து வரும் வல்லமையாகிய தூய ஆவியை அருளி / கடவுளின் திருவுளத்தின் மறை பொருளை அவர்களுக்கு தெரியப்படுத்தி / தங்களை வெறுத்து கடவுளுக்காக வாழும் தியாக வாழ்க்கையில் அவர்களை நடத்தி வருகிறார் என்றும் விசுவாசிக்கிறோம் . ( அப் 1:8, லூக் 24:49, ரோம 12:1, எபே 1:10)
- திருச்சபையாருடைய எண்ணிக்கை நிறைவு பெற்றபின் / யெசுவா திரும்பி வந்து அவர் இருக்கும் இடத்திலேயே நாமும் இருக்கும் படி / பிதாவிடம் அழைத்துச் சென்று நம்மை மகிமைப் படுத்துவார் என்று விசுவாசிக்கிறோம். (வெளி 6 :11 யோவான் 14: 3 ரோம 8 : 29)
- திருச்சபையார் மகிமை பெற்ற பின் / இப்பொழுது உள்ள பூமியும் அதில் உள்ள செயல்களும் நெருப்பால் எரிந்து அழிந்து போகும் / வானங்கள் பெரு முழக்கத்துடன் மறைந்து அழியும் / பஞ்சபூதங்கள் வெந்து உருகி, புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று விசுவாசிக்கிறோம். (மத்தேயு 13: 30 ;39- 40 1 பேது. 3 :7; 10 -13 எபி 12: 27 )
- இப்புதிய வானம் புதிய பூமியில் உயிர்த்தெழுந்து வரும் மக்களை ஏமாற்றாதபடிக்கு / சாத்தானை ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும்,/ யேகோவா செயலிழக்க செய்வார் என்றும் விசுவாசிக்கிறோம். (வெளி. 20: 1-3)
- சாத்தான் செயலிழந்த பின் / யெசுவாவும் திருச்சபையாரும் இணைந்து/ உயிர்த்தெழுந்து வரும் மக்களுக்கு / பாரபட்சம் இல்லாத நேர்மையான தீர்ப்பு வழங்கும் ஆயிரம் வருட ஆ ட்சிஅதிகாரத்தை, கடவுள் அளிப்பார் என்றும் விசுவாசிக்கிறோம். (வெளி. 20 : 4)
- அந்த ஆயிர வருட அரசாட்சி காலத்தில் /அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்பட்டு, /அவர் தம்முடைய மரணத்தினால் சம்பாதித்த நித்தியஜீவன் அடைய வழி நடத்தப்பட்டு பூரணப்படுவார்கள்/ ஆனால் மனப்பூர்வமாய் சீர்திருத்தாதவர்கள் இரண்டாம் மரணத்திலே அழிக்கப்படுவார்கள் என்றும் விசுவாசிக்கிறோம். ( 1 கொரி 15:23, யோவா 5:28, ஏசா 26:9 )
- எல்லாச் சத்துருக்களையும் தமது பாதபடியாக்கு மட்டும் / யெசுவாவும் திருச்சபையாரும் இணைந்து ஆளுகை செய்து / கடைசிச் சத்ருவாகிய மரணத்தை அழித்து / எல்லாவற்றையும் முந்தின சீருக்குக் கொண்டுவந்து / அனைத்தையும் மீட்டெடுத்து/ யேகோவாவே சகலத்திலும் சகலமுமாய் இருப்பதற்கு / ஒரே அதிகாரத்தின் கீழ் ஆளும் அரசராகிய யேகோவாவுக்கு இராஜ்யத்தை ஒப்புக்கொடுத்து / யெசுவாவும் அவருக்கு கீழ்பட்டிருப்பார் என்றும் விசுவாசிக்கிறோம். ( 1கொரி 15:25,26,28 , லூக் 19:10)
- ஆமென் .

விசுவாசம் மற்றும் கோட்பாடுகள்
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். 1பேதுரு 4:11
1) பரிசுத்த பைபிள்:
- வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டது. (2தீமோ.3:16,17)
- அவைகள் கடவுளுடைய வார்த்தைகள். விசுவாசத்திற்கு அவசியமானவைகள் எழுதப்பட்டிருக்கிறது. அவைகள் சத்தியம். (சங்19:7-10; யோவா.17:17:20:31; சங் 119:142)
- கடவுள் தம்முடைய குமாரனுக்காக ஆதியில் தீர்மானித்த ஆலோசனையையும் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. ( கொலோ.1:16; எபே.1:9,10,12; 3:9-11)
- அவைகளால் மிகுந்த பலன் உண்டு. (சங் 19:11)
- யோவானுக்கு வெளிப்படுத்திய ஆகமத்தோடு அனைத்துத் தேவ வெளிப்பாடுகளும் முடிந்துவிட்டது. அதற்குமேல் கூட்டவோ, குறைக்கவோ கூடாது. (எபி. 1:1,2; வெளி.22:18,19)
2) கடவுள்
- கடவுள் ஒருவரே. மூவர் அல்ல. 1தீமோ.2:5;
- யாவே ஒருவரே மெய்யான கடவுள். (யோவா.17:3) (1தீமோ.2:5; சங்.83:17; ஓசியா.12:5)
- அவர் ஒருவரே எல்லாருக்கும் பிதா. (1கொரி 8:5,6,7)
- அவருக்கு ஒப்பானவர் யாருமில்லை. (யாத்.8:10; ஏரே.10:6; .ஏசா.46:5)
3) குமாரன்
- யாவே கடவுளின் ஒரே மகன். (.சங்.2:7; எபி.1:5,6; யோவா.3:16; மத்.3:17)
- யாவே கடவுளின் முதல் படைப்பு. ( வெளி.3:14; கொலோ.1:15; )
- குமாரன் தம்மில்தாமே ஜீவனுள்ளவர் அல்ல; பிதா குமாரனுக்கு ஜீவனைக் கொடுத்தார். (சங்.2:7; நீதி.8:22)
- பிதாவுக்கு சமமானவர் அல்ல. (யோவா.10:29; 14: 28)
- பிதாவுக்கு கீழ்பட்டவர். (1கொரி.15:27,28; எபி.5:8)
- தேவனுக்கும் மனிதனுக்கும் இவர் ஒருவரே மத்தியஸ்தர். (1தீமோ.2:5,6) இவரே மனுஷனாக வந்தவர். (கலா.4:5; எபி .2:9)
4) பரிசுத்த ஆவி
- பிதா பரிசுத்தர். (ஏசா.6:3; 57:15) பரிசுத்தரிடமிருந்து புறப்பட்டு வரும் ஆவி பரிசுத்த ஆவி. (லூக்.1:35)
- பரிசுத்த ஆவி ஒரு ஆள் அல்ல. அது உன்னதத்திலிருந்து வரும் பெலன் (அப்.10:38; யோவா.3:34; லூக்.24:49)
- இயேசு கிறிஸ்து வழியாக பரிசுத்த ஆவியை திருச்சபையார் பெறுகிறார்கள். (அப்.2:33; லூக்.11:13; தீத்து.3:7)
- திருச்சபையார் பெற்றுக்கொள்ளும் பரிசுத்தஆவி ஆள்தத்துவமான ஒரு ஆள் அல்ல.
- பிதாவிடமிருந்து குமாரன் வழியாக பெற்றுக்கொள்ளும் பரிசுத்தஆவியின் வரம், அபிஷேகம், முத்திரை, அச்சாரம், . (அப்.2:38; 2கொரி1:21,22; எபே.1:13,14; 1யோவா2:27, ரோம.15:13,18)
- இது சகல சத்தியத்திலும் வழிநடத்தும். பெற்ற பரிசுத்த ஆவியின் வரங்களுக்கு விரோதமாக செய்யும் பாவம் மன்னிக்கப்படாது.(மத்12:31,32)
5) லூசிபெர்
- இயேசுவின் முதல் படைப்பு. (ஏசா.14:12)
- அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப். (எசே.28:14)
- பிதாவுக்கு சமமாக நினைத்ததால் சாத்தானாக மாறினான். (ஏசா.14:14)
- சாத்தானுக்கு யாவே கடவுள் கொடுத்த தண்டனை மரணம். (எசே.28:18; ரோம.16:20; எபி.2:14; 1யோவா.3:8;
6) திரித்துவம்
- கடவுள் திரித்துவமாக இருக்கிறார் என்பது பைபிளுக்கு நேர் எதிரான போதனை. (1தீமோ:2:5)
- கடவுள் ஒருவரே. மூவர் ஒருவராக இல்லை. (ஏசா.46:9)
- கடவுளுக்கு சமமான இன்னொரு கடவுள் இல்லை. (சங். 113:5; ஏசா.46:5; 40:25; 1ராஜா.8:23)
- கடவுளுக்கு சமமாக இன்னொரு கடவுளை சொல்வது கடவுளுக்கு சமமாக எண்ணிய பிசாசின் சிந்தனை. (ஏசா.14:12-14; 40:18; 42:8)
- கடவுளுக்கு கீழ்படிந்து தன்னை தாழ்த்தியது. இயேசுவின் சிந்தனை. (பிலி.2:6-8; எபி.5:8)
7) மரணம்
- பாவத்தால் வருவது மரணம். தேவ கட்டளையை மீறுவதே பாவம். மரணம் ஆதாமின் மீறுதலால் வந்தது. (ஆதி.2:17; 1.3:4)
- மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மனிதன் மீண்டும் மண்ணுக்கே திரும்புவது மரணம். (ஆதி.3:19)
- மனிதன் மரித்தபின் ஆவியாகவோ, ஆத்துமாவாகவோ அலைந்து திரிவது இல்லை. (யோபு. 14:10)
- ஒன்றுமில்லாமல் போவதே மரணம். (யோபு. 14:11)
5. இயேசு மரித்து மனுக்குலத்தின் பாவத்தை போக்கியதால் மரணம் இளைப்பாறுதலாக அல்லது தூக்கமாக மாற்றப்பட்டது. (யோவா 11:12-14; மாற்.5:39; 1கொரி.1520)
6.மரண நித்திரையிலுள்ள அனைவரும் உயிர்த்தெழுவார்கள்.(தானி. 12:2,13:யோ.5:28)
8) ஆத்துமா
1 ஆத்துமா என்ற பதம் பைபிளில் மனிதன், மிருகம், உயிர், உள்ளம், ஆவி, சிந்தனை இவற்றிற்கு மாறி மாறி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. (யாத் 12:4,15; எண்31:28;லேவி. 24:18; 23:9; எண்.35:31; லேவி11:46; ஆதி.19:20; எண்11:6; யோபு.11:20; பிர.3:19,21; யோபு.17:11)
- ஆத்துமா என்பது மனித உடம்பில் உள்ள அழியாத அல்லது சாகாத வஸ்து அல்ல. (ஆதி.2:7)
- பாவம் செய்கிற ஆத்துமா சாகும். (எசே.18:4,20; மத்.10:28)
9)நரகம்
- பாவத்தின் சம்பளம் மரணம்; நரகம் அல்ல. (ரோம.6:23)
2.சாத்தானுக்கு தண்டனை மரணம் தான்; நரகம் அல்ல. ( எசே.28:18,19; .வெளி.20:10,14)
- மனிதர்களை தீயில் போட்டு வாட்டுவதை கடவுள் அருவருக்கிறார். இது கடவுளின் மனதில் தோன்றினதே இல்லை. (எரே.19:5)
- பாதாளம், கெகன்னா என்ற வார்த்தையை நரகம், எரிநரகம் என்று தவறுதலாக மொழி பெயர்த்து விட்டனர். (ஆதாரம்:பொது மொழிபெயர்ப்பு)
10) பாதாளம்
- பாதாளம் (Heb: Sheol; Gr:Hades) என்பதற்கு பிரேதக்குழி என்பதே சரியான மொழிபெயர்ப்பு. (யோவான்.5:28) Gehenna என்பது கின்னோம் பள்ளத்தாக்கு.
2. மனிதன் மரித்தமின் யூமிக்கடியில் கல்லறையிலோ, மண்ணிவோ ஒன்றுமிவ்லமல் போகிற இடமே பாதாளம். யோபு.14:11;
- பாதாளத்தில் ஞானமோ, செய்கையோ, வித்தையோ, அகந்தையோ, சிந்தனையோ, சிநேகமோ, பகையோ இல்லை. (பிர.9:10, சங்.146:4)
- பாதாளத்திற்கு போகிறவர்கள் கடவுளை துதிக்க முடியாது. (சங்.115:17; 88:10; ஏசா.38-18)
11) இரண்டாம் மரணம்
- பைபிள் நிரந்தர அழிவை இரண்டாம் மரணம் என்று கூறுகிறது.(யூதா.12,13)
- இரண்டாம் மரணத்தை அக்கினிக்கடல் என்று உருவக அணியில் சொல்லப்பட்டுள்ளது. (வெளி.20:14)
- உலக ஜனங்கள் இப்பொழுது அடையும் மரணம் ஆதாமுடைய பாவத்தால் வந்தது. இது முதல் மரணம். (ரோம.5:12)
- திருச்சபையார் ஞானஸ்நானத்தில் முதல் மரணம் அடைகிறார்கள். (ரோமர் 6:3; கொலோ.2:12) திருச்சபையாரில் பாவம் செய்பவர்கள் அடைவது இரண்டாம் மரணம். (எபி.10:26,29; எபி.6:6; ரோம.6:12,23)
12) விக்கிரக ஆராதனை
- தேவனுக்கு அருவருப்பு. (உபா.7:25,26; எசே.8:9-13)
- இது பேய் வணக்கம். (1கொரி.10:20; சங்.106:37,38)
- ஆண், பெண் உருவங்களும், மிருகங்கள் பறவைகள் மச்சங்களின் உருவங்களும், சூரிய சந்திர நட்சத்திரங்களான வானத்திலுள்ளவைகளையும் பூமியிலுள்ள சகல சிருஷ்டிகளை வணங்குவதும், சிலைகளை தேவனுக்கு ஒப்பாக எண்ணி ஆராதனை செய்வதும், சித்திரப்படமும், சிலுவையும், பொருளாசையும் விக்கிரக ஆராதனையே. (உபா4:16-18; 16:22; கொலோ.3:5)
- விக்கிரகத்தை உண்டுபண்ணுகிறவன் சபிக்கப்பட்டவன். (உபா..27:15).
- விக்கிரகாராதனைக்காரர் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.(1கொரி.6:9,10)
13) கிறிஸ்துமஸ்
- இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25ஆம் தேதி அல்ல.
- இயேசு மரிக்கும் போது அவரின் வயது 33 ½(தானி.9:24,27) இது ஏப்ரல் மாதம் என்றால் அவரது பிறந்த நாள் 6 மாதத்திற்கு முன்பு இருக்க வேண்டும். அப்படியானால் அக்டோபர் மாதம் இயேசு பிறந்த மாதம்.
- இயேசுவின் பிறந்தநாளை கொண்டாட தேவ கட்டளை இல்லை. ஜெர்மனியர்கள் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த ஒளித்திருநாளை கிறிஸ்துமஸ் திருவிழாவாக மாற்றினார்கள். (ஆதாரம்: திருச்சபை வரலாறு)
14) புனித வெள்ளி, ஈஸ்டர்
- இயேசுவின் மரணநாளோ, உயிர்த்த நாளோ ஒவ்வொரு வருடமும் ஒரே தேதியில் தான் வரும், ஆனால் ஒரே கிழமையில் வராது. (கலா.4:10,11)
- வருஷந்தோறும் இயேசுவின் மரண நாள் (Good Friday) வெள்ளிக் கிழமையிலும் உயிர்த்தெழுந்த நாள் (Easter) ஞாயிற்றுக் கிழமையிலும் தான் என்பது பைபிள் கூறாதது.
- யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தின்படி 3 இரவு 3 பகல் இயேசு கல்லறையில் (பாதாளத்தில்) இருந்தார். (மத்.12:40; மாற்கு .8:31)
15) இராப்போஜனம்
- “இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை” :1 கொரிந்தியர் 11:25 அவ்வாறே, இரவு உணவுக்குப் பிறகு அவர் பாத்திரத்தை எடுத்து, “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.
- பாவமன்னிப்பாகிய மீட்பு: கொலோசெயர் 1:14 [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
- இளவரசராகிய யெசுவா வரும்வரை அறிவியுங்கள்”ஆதலால், நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள். 1கொரி11:26
- இராப்போஜனம் ஆசரிக்கும் போது அப்போஸ்தலர்களும் கால் கழுவுதல் சடங்கை ஆசரித்தார்கள் என்பதற்கு ஆதாரமும் இல்லை. இயேசு காண்பித்தது தாழ்மையின் மாதிரி. (யோவா.13:5) தாழ்மை அவசியம். இதனால் இராப்போஜனம் ஆசரிக்கும் போது கால் கழுவுதல் சடங்கு அவசியமில்லை.
16) இராப்போஜன நாள்
- இயேசு தான் காட்டிக்கொடுக்கப்பட்ட இராத்திரி சீஷர்களுக்கு இராப்போஜனத்தை கட்டளையிட்டார். (1கொரி.11:23-25)
- இயேசு மரித்தது யூதர்களின் பஸ்கா பண்டிகையின் ஆயத்த நாளில், பகல் 03.00 மணிக்கு, அது நிசான் அல்லது அயிப் 14-ஆம் தேதி மகல் (யோவா 19:31,42; லூக் 23:54)
- வருஷத்தின் முதலாம் மாதம் 14-ஆம் தேதி சாயங்காலம் பஸ்கா ஆட்டை அடித்து எதிர் வரும் இராந்திர 15.ஆம் இநதி அதன் மாமிசத்தைப் புதித்து பஸ்கா எனப்பட்ட
புளிப்பில்லா அப்பப்பண்டிகை ஏழு நாள் கொண்டாடுவார்கள். (லூக்22:1; மாற் 14:12) பண்டிகைக்கு முந்தின நாள் ஆயத்த நாள். - இயேசு மரித்தது நிழலான பஸ்கா ஆடு அடிக்கப்பட்ட அதே நாளில் அதே நேரத்தில். அது நிசான் 14-ஆம் தேதி சாயங்காலம். 13-ஆம் தேதி அல்ல. (யாத். 12:6)
- தேதி முக்கியமானது என்றாலும், அதைக் கடந்து நோக்கம் முக்கியமானதாகவே வேதம் முன்னிலைப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் பஸ்கா பண்டிகையை இரண்டாவது வாய்ப்பாக ஆசரிக்க அனுமதி அளிக்கப்படுவது(எண். 9:6-13) இது அந்த நாளின் தேதியை விட, அதன் நோக்கத்தைக் முக்கியமாக பார்க்கிறதைக் காட்டுகிறது.
- நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் இராப்போஜன ஆசரிப்பை வருஷத்துக்கு ஒரு முறை இயேசு மரணமடைந்த நாளில் ஆசரிக்க வேண்டும் என்பதற்கு வசன ஆதாரம் எங்கும் இல்லை அப்போஸ்தலர்களும் இவ்வாறு வருடம் ஒருமுறை தான் ஆசரித்தார்கள் என்பதற்கு ஆதாரமும் இல்லை.
- புறஜாதிகளில் இருந்து வந்த ஒவ்வொரு இயேசுவின் சீஷனும் , யூதர்கள் வைத்திருக்கும் காலண்டர் அடிப்படையில் தான் இராப்போஜன ஆசரிப்பை ஆசரிக்க வேண்டும் என்று கூறும் எந்த வாதமும் வேதத்திற்கு உடன்பட்டதல்ல.
17) அந்தி கிறிஸ்து
- எதிர்-கிறிஸ்து (Anti-Christ) என்பது சரியான மொழிபெயர்ப்பு.
- பிதாவையும், குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்தி கிறிஸ்து. (1யோவா.2:22)
- அந்தி கிறிஸ்து ஒருவன் அல்ல. அநேகர். (1யோவா.2:18; மத்.24:4,5)
18) கள்ளக் கிறிஸ்துகள், கள்ளத் தீர்க்கதரிசிகள்:
- கடைசி காலத்தில் அநேக கள்ளக் கிறிஸ்துகள் எழும்பி. நானே கிறிஸ்து என்று வஞ்சிப்பார்கள். (மத்.24:5; லூக்.21:8)
- கிறிஸ்து வந்திருக்கிறார் என்று அநேகரை ஏமாற்றுவார்கள். (மத்.24:23,26)
- கூடுமானால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும், ஏமாற்றத்தக்கதாக, அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வார்கள். (மத். 24:24)
19) 666
- 666அது மனுஷனுடைய இலக்கம் என்று சொல்லப்பட்டது. போப்பு ஆண்டைைரயும்,அது மிருகத்தின் இலக்கம் என்று சொல்வப்பட்ட போப்பு இராஜ்த்தையும் குறிக்கும். (தானி.7:23 -24;; வெளி.13:16-18)
- போப்புவின் கிரீடத்திலுள்ள vicarius filii dei என்ற மூன்று இலத்தீன் வார்த்தைகளின் எண்ணுருக்களின் சுடுதல் 666.
- vicarius( REPRESENTATIVE) SON OF GOD தேவக்குமாரனின் பிரதிநிதி என்று பொருள்.
- மிருகம், சின்னக் கொம்பு, வேசி ஸ்திரி, மகா பாபிலோன், அக்கிரமக்காரன், பாவ மனுஷன் என வேதம் சுட்டிக்காட்டுவது இந்த 666-யே குறிக்கும். (தானி.7:8; 8:9; வெளி..17:1,5; 2தெச.2:3,9)
20) வஞ்சக ஆவி
- இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கை பண்ணாமல் இயேசுவே மெய்யான தேவன் என்று அறிக்கை பண்ணுகிற அனைத்து ஆவியும் வஞ்சக ஆவியே.(1யோவா4:1-6).
- சத்திய வசனத்தின் மேல் உள்ள அன்பை விட்டவர்களிடத்தில் சாத்தானின் சகல வல்லமையோடும் பொய்யான அற்புதங்களோடும் இது கிரியை செய்யும். (2தெச.2:9-12; வெளி.16:13,14)
21) சீஷர்கள்
- இயேசுவை பின்பற்றுகிறவர்கள் சீஷர்கள்.(Followers) வெளி.14:4
2. தன் சிலுவையை சுமந்துகொண்டு அனுதினமும் எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.(.லூக் 14:26,27)
3.சீஷர்கள் 12 பேர் மாத்திரமல்ல. 1.44,000 பேர் சீஷர்களே.(மத்..10:1: அப்..6:7; வெளி..14:1,4)
- 12 சீஷர்கள் மற்றவர்களை சீஷர்களாக்கினார்கள்.(மத்.28:19)
- இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள்.(அப்.11:26)
- சீஷர்கள் மட்டுமே கிறிஸ்துவின் சரீரமான சபையார்.(1கொரி.12:27)
- இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள், பிதாவாகிய கடவுளுக்குப் பிள்ளைகள். இயேசுகிறிஸ்துவுக்குப் பிள்ளைகள் அல்ல.(யோவா.1:12,13;கலா.3:26). இயேசுவை 'அப்பா' என்று அழைக்காமல் பிதாவை மட்டுமே 'அப்பா' என்று அழைக்க வேண்டும்.(ரோம.8:14-17; கலா.4:6)
22) திருச்சபை
- திருச்சபை (church) என்பது கட்டிடம் அல்ல. (1கொரி.3:17) இயேசு கிறிஸ்துவின் சீஷத்துவத்துக்கு அழைக்கப்பட்ட சீஷர்களே திருச்சபை. (மத். 28:19)
- கிறிஸ்துவின் சரீரமான திருச்சபையார் பெருமந்தை அல்ல. சிறுமந்தையே. வரையறுக்கப்பட்ட 1,44,000 பேர். (. லூக் .12:32; கொலோ.1:18; .வெளி.14:1-4).
- யூதர், புறஜாதியார் என்று வேறுபாடு இல்லாமலும், ஆண், பெண் வேறுபாடு இல்லாமலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். (கலா.3:28; . எபே. 2:11-16)
- கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் எடுத்தது முதல், மரணம் மட்டும் நிலைத்திருப்பவர்கள் திருச்சபையில் சேர முடியும். (மத்..24:13; வெளி.2:10)
5. இவர்கள் பெந்தெகொஸ்தே நாள்முதல் இயேசுவின் இரண்டாம்வருகை வரை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.(அப்.2:1; 1தெச4:15-17)
23) வேதாகமக் காலக்கணக்கு
- 360 நாட்கள் ஒரு வருடமாக கொண்ட காலக்கணக்கீட்டை வேதம் கூறுகிறது. (3½ வருஷங்கள் = 42 மாதங்கள் = 1260 (வெளி.11:2,3)
- சூரிய காலக்கணக்கின்படியான 365% நாட்கள் கொண்டது ஒருவருடம் என்று நாம் பயன்படுத்தும் கி.மு, கி.பி காலக்கணக்கை பைபிள் கூறவில்லை.
- பைபிள் கூறும் காலத்தை கி.மு. கி.பி பொது சகாப்த வருடங்களோடு கணக்கிட்டு கூறக்கூடாது.
- காலங்களையும் வேளைகளையும் பிதா தம்முடைய ஆதீனத்தில் வைத்திருக்கிறார். (அப்.1:7)
- அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். (பிர.3:11; கலா.4:5; யாத்.12:41; ரோம.5:6)
24) இரண்டாம் வருகை
- நான் போய் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணிவிட்டு மறுபடியும் வருவேன் என்பதே இயேசு தம்முடைய சீசர்களுக்கு கொடுத்த நம்பிக்கை.(யோவா 14:1-3)
- பிதாவின் மகிமை பொருந்தினவராக வல்லமையோடு வருவார். (மத். 16:27; 1தெசலோ.4:16)
- இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது என்று ஒரு வருஷத்தையோ, ஒரு நாளையோ, ஒரு நாழிகையோ குறிப்பிட்டு வேதம் கூறவில்லை. (மத்.24:44; மத்.25:13)
- இயேசு தனது வருகைக்கு அடையாளங்களை மட்டுமே கூறினார். (மத். 24:3,4) வருகையின் நாளையோ,வருடத்தையோ எனக்கு தெரியாது என்றார். பிதா ஒருவரே அதை அறிவார். (மாற்கு 13:32; மத்24:36). காலக்கணக்குகளால் அதை அறியமுடியாது.
- இயேசுவின் இரண்டாம் வருகை இன்னும் நடைபெறவில்லை.
- அவர் வரும் நாளையோ, நாழிகையோ, வருடத்தையோ, நாம் அறியாதபடியால் விழிப்போடும். அவர் வருகையை எதிர் நோக்கி ஆயத்தமாயுமிருக்கவேண்டும். (மத்.24:44; .மாற் .13:33; யாக்.5:7,8)
25) 1000 வருட அரசாட்சி
- இது கிறிஸ்து மட்டும் செய்யும் ஆட்சி அல்ல.
கிறிஸ்துவோடு திருச்சபையாரும் சேர்ந்து செய்யும் ஆட்சி. (வெளி.20:4; 2தீமோ 2:12) 1000 வருட அரசாட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை.
- ஏனெனில் ஆட்சி செய்யும் திருச்சபையாரின் அழைப்பு இன்னும் இருக்கிறது. (1யோவா. 3:2). இன்னும் முதலாம் உயிர்த்தெழுதல் நடைபெறவில்லை.(வெளி.20:6)
- இது நீதியின் ஆட்சி என்றும், இருப்புக்கோல் ஆட்சி என்றும் சொல்லப்படுவதால் இது இன்னும் ஆரம்பிக்கவில்லை. (.வெளி.2:27; சங். 2:8,9; ஏசா.32:1)
- இந்த ஆட்சியின் தொடக்க முதல் முடிவு மட்டும் 1000 வருஷம் முழுவதும் ஜனங்களை மோசம் போக்காதபடி சாத்தான் முழுமையாக கட்டப்பட்டு இருக்க வேண்டும். (வெளி..20:2)
26) மறுரூபம்
1 இயேசுவின் இரண்டாம் வருகை மட்டும் மரித்த பரிசுத்தவான்கள் அவர் வருகையில் முதலாம் உயிர்த்தெழுதல் அடைவார்கள். (1தெச.4:16,17). வருகையின்போது உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள்,சாகாமலேயே ஆவியின் சரீரத்திற்கு மறுரூபம் ஆவார்கள். (யோவா.11:25,26)
- மரித்தவர்கள் ஜீவன் பெறுவது உயிர்த்தெழுதல். (Resurrection), மரிக்காமலேயே ஆவியின் ரூபம் பெறுவது . (Transfiguration)
3 சாகாமலே மறுரூபமாகும்போது மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறும்.(1கொரி.15:51-54; ஓசியா.13:14)
27) பாபிலோன்
1.புதிய எருசலேம் நகரம் உண்மையான திருச்சபையை குறிக்கிறது. மேலும் கற்புள்ள ஸ்திரி என்று வேதத்தில் உருவக அணியில் கூறப்பட்டுள்ளது. (வெளி21:2; வெளி.14:4;2 11:2) 2. பாபிலோன் நகரம் போலியான சபையை குறிக்கிறது: இதை வேசி ஸ்திரி என்று வேதத்தில் உருவக அணியில்கூறப்பட்டுள்ளது. (வெளி17:15,18)
3. புதிய எருசலேம் மகிமையடையும். (வெளி.21:10).பாபிலோன் அழியும் (வெளி.18:8,10,16,19)
28) தற்போதைய இஸ்ரயேல் தேசம்.
1.திருச்சபையார் உற்றுப் பார்க்கும் கடிகாரம் அல்ல.
- தேசம் உருவானது அர்மகெதோன் யுத்தத்திற்கு ஆயத்தம். (எசே..38:7-9: 16-23; சகரியா.14:2,3)
- சகல ஜாதிகளின் தேசங்கள் அழிக்கப்படும்போது இஸ்ரயேல் தேசமும் அழியும். (தானி.2:44)
29) அர்மகெதோன் யுத்தம்
- இனி நடக்க இருக்கும் அர்மகெதோன் யுத்தம் மெகிதோ என்ற இடத்தில் நடந்த யுத்தம் போல இருக்கும். அது அடையாள பாஷையில் சொல்லப்பட்டுள்ளது. (வெளி-16:16)
2. யாவே கடவுளே முன்னின்று,மாகோகு தேசத்தானான கோகுக்கு விரோதமாக நடத்தும் யுத்தம். (எசே.38:1,16,391)
3.திருச்சபையார் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு பாபிலோன் பேர் சபைகள் நிர்மூலமாக்கப்படும். அதன் பின்பே அர்மகெதோன் யுத்தம் நடக்கும். (எசே.38:1-7; சக.12:1-6; 14:1-3; சங்..81:3-8)
4.இதுவே கடைசி யுத்தம், (சக.14:12,13; எசே.38:22,23)இதைத் தொடர்ந்து இவ்வுலகம் அழிக்கப்படும். புதிய வானம், புதிய பூமியில் அர்மகெதோன் யுத்தம் நடக்காது.
5.இயேசுகிறிஸ்துவின் 1000 வருஷ அரசாட்சி முடியும்போது சாத்தான் பூமியின் நான்கு திசைகளிலும் உள்ள கோகையும், மாகோகையும் யுத்தத்திற்கு கூட்டிக் கொண்டு வருவான் என்பது. கடவுள் சாத்தானையும், அசுத்த ஆவிகளையும், பாவிகளையும் அழிக்கும் யுத்தம். இது மனிதர் நடத்தும் யுத்தம் போல் இராது. இதில் கடவுளுடைய சத்துருக்கள் எல்லாம் அழிக்கப்பட்டுப்போவார்கள்.(வெளி.20:7-10)
30) புதிய வானம் புதிய பூமி
- நோவா காலத்தில் சொல்லர்த்தமான தண்ணீரால் உலகம் அழிக்கப்பட்டது போல இப்பொழுது நாம் வாழும் இவ்வுலகம் சொல்லர்த்தமான அக்கினியால் அழிக்கப்படும்.(2பேது.3:7,6; எபி.12:29)
- அப்போதிருந்த உலகம் ஜலத்தினால் அழிந்தது என்று சொல்லும்போது பூமி அழியாமல் பூமி மேற்பரப்பில் உள்ள ஏற்பாடுகளும் மக்களும் அழிந்தது போல இவ்வுலகம் அழியும் போது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஏற்பாடுகளும் மக்களும் அழிவர். (2பேதுரு3:10) பூமியோ நிலைத்திருக்கும். (பிர..1:4; சங்.102:25; 104:5;நீதி.8:29; யோபு. 38:4)
- வரப்போகும் அழிவை உலகத்துக்கு எச்சரிக்க வேண்டும். (எசே.33:2-6; 2பேது.2:5)
- இவ்வுலகமானது அக்கினியினால் எரிந்து சாம்பலான பிறகு சிருஷ்டிக்கப்பட்ட நாளில் இருந்தது போல பூமியும் வானமும் மாறிப் போகும். அதுதான் புதியவானம், புதிய பூமி.( எபி.12:26-28).
- இந்த புதியவானம் புதிய பூமியில் தான் 1000 வருட அரசாட்சி நடைபெறும். 1000 வருட அரசாட்சி முடிந்தபின்பு தான் என்றென்றைக்கும் அழியாத பிதாவின் ராஜ்யம்.(வெளி.21:1,2; 20:4; 1கொரி.15:24).
31) ஜூபிலி
- அவரவர் காணியாட்சிக்கும் சுதந்திரத்திற்கும் திரும்பிப் போகும் விடுதலை வருஷமே ஜூபிலி வருஷம்.(உபா.31:10)
- ஏழு ஏழு ஓய்வு வருஷங்கள் (7×7) 49 வருஷங்கள் முடிந்து ஐம்பதாவது வருஷமே ஜூபிலி வருஷம்.
- 49வது வருடம் ஜூபிலி அல்ல. 50ஆம் வருடமே ஜுபிலி வருடமாகும். (லேவி.25:10,11,12)
- சிருஷ்டிப்பில் ஒரு நாள் என்பது 7000 வருடங்கள் என்றால் ஏழு நாள் என்பது 7X7000=49,000 வருடம் .இது ஜூபிலி வருடம் அல்ல; 50,000 வருடமே ஜுபிலி வருடமாகும். (வெளி .21:4).
- இயேசுவின் 1000 வருட அரசாட்சி ஜூபிலி வருடமல்ல. பிதாவின் ராஜ்யமே நிழலான ஜூபிலியின் நிறைவேறுதலான பெரிய ஜூபிலி ஆகும். (வெளி 21:4).
32) ஞானஸ்நானம்:
1. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த கட்டளை. (மத்.28:19,20)
2.(ஞானஸ்நானம்) தண்ணீர முழுக்கு அவசியம். (அப்.8:36-38)
3.ஞானஸ்நானம் என்பது நல்மனசாட்சியின் உடன்படிக்கை. இயேசு மூலமாக பிதாவிடம் உடன்படிக்கை செய்ய வேண்டும்.(1பேது.3:21; ரோமர் 6:3-11)
4.ஞானஸ்நானத்தின் மூலம் பாவமன்னிப்பு, புதுசிருஷ்டி, பரிசுத்த ஆவி கிடைக்கிறது. (அப்.2:38; 2கொரி.5:17; எபே.1:13).
5.பிதாவுக்கு பிள்ளையாகவும், இயேசுவுக்கு சகோதரனாகவும், சீஷனாகவும் மாறுவது ஞானஸ்நானம். (யோவா.1:12; எபி..2:11; யோவா.20:17; மத்..28:19; அப். 11:26)
33)ஓய்வு நாள்
- ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்; பரிசுத்த குலைச்சலாக்குகிறவன் கொலைசெய்யப்படுவான் என்பது நிழலான நியாயப்பிரமாணக் கட்டளை. (யாத்.31:13,14,15)
- புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் ஓய்வு நாளைக் குறித்து ஒருவனையும் குற்றப்படுத்தக் கூடாது.(கொலோ..2:14-17)
- ஓய்வு நாள் சனிக்கிழமையோ ஞாயிற்றுக் கிழமையோ அல்ல.
- ஓய்வு நாளை வேலை நாட்களாக ஆக்கினாலும் குற்றம் இல்லை. (மத். 12:5)
- நாமே ஆசாரியர்கள், ஆசாரியர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க தேவையில்லை.(1பேதுரு.2:9).
34) ஆசாரியத்துவம்
- நியாயப்பிரமாணத்தின்படி லேவி கோத்திரத்திலிருந்து ஆரோன் பிரதான ஆசாரியன். அவன் குமாரர் ஆசாரியர்கள். (எபி 7:11) இது ஆரோன் முறைமையின்படியான ஆசாரியத்துவம்.
- நியாயப் பிரமாண நிறைவேறுதலின்படி யூதா கோத்திரத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து மெல்கிசேதேக் முறையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியர்.(எபி.5:4-6,10,சங்.110:4)
- இது மெல்கிசேதேக்கின் முறைமையின்படியேயான ஆசாரியத்துவம். கிறிஸ்துவுக்குள் நாம் ஆசாரியர். (1.பேது.2:9,5;வெளி 1:6)
- ஆரோன் முறைமையின்படியான ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டதால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட வேண்டும். (எபி7:12,18)
- பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கையை நீக்கிப்போட்டு, புதிய உடன்படிக்கையை நிலைநிறுத்தும்படிக்கு அன்பின் பிரமாணத்தை திருச்சபைக்கு கொடுத்தார்.(எபி.10:8,9; யாக்.2:12).
35) நியாயத்தீர்ப்பு
- தேவனே நீதியுள்ள நியாயாதிபதி. (சங். 75:7; 7:11, 50:6)
- தேவன் தாமே நியாயத்தீர்ப்பு செய்யாமல் நியாயத்தீரப்பு செய்யும் அதிகாரத்தை குமாரனுக்கு கொடுத்திருக்கிறார். (யோவா.5:22).
- குமாரன் தனியாக நியாயத்தீர்ப்பு செய்யாமல் மணவாட்டியாகிய சரீரமான சபையார் 1,44,000 பேரோடு சேர்ந்து நியாயத்தீர்ப்பு செய்கிறார். (வெளி-20:4).
- கிறிஸ்துவும் சபையும் நியாயத்தீர்ப்பு செய்யும் காலம் 1000 வருட காலப்பகுதியாகும்.
- வேதத்தில் நியாயத்தீரப்பு என்ற வார்த்தையானது தண்டனை கொடுப்பதாக மட்டும் குறிக்காமல் மனிதர்கள் சத்தியத்தை அறிந்து சீரதிருத்துவதற்காக, கொடுக்கப்படும் கிருபையின் காலமாகவும், மரித்தோர் உயிர்த்தெழுந்து ஜீவனைப் பெறும் மறுஜென்ம காலமாகவும், மகிழ்ச்சியான நாளாகவும் சொல்லப்படுகிறது. (ஏசா-26:9; ஏசா.11:3-.5)
- தேவனுடைய நியாயத்தீர்ப்பு நடக்கும் போது சீர்திருந்தாதவர்களுக்கு நி