பேர் கிறிஸ்தவர்களுக்குள்ளிருக்கும் சில தப்பறையான உபதேசங்கள்.

ரோமன் கத்தோலிக்க சபையானது. அப். பேதுருவின் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ள தென்பது ஓர் தப்பு. இயேசு கிறிஸ்து, சீமோனுக்குக் கொடுத்த பெயர் பேதுரு. பேதுரு என்றால் ஓர் கல் என்று அர்த்தம். இயேசுகிறிஸ்து பேதுருவை நோக்கி, நீ பேதுரு, நீ ஓர் கல். (Petras) இந்த கற்பாறை (தன்னைக்காட்டி) மேல் என் சபையைக்கட்டுவேன் என்றார். இயேசுகிறிஸ்து தன்னையே திருச்சபைக்கு அஸ்திபாரமான முக்கிய கற்பாறை என்று கூறினார். மற்ற அப்போஸ்தலர்கள், மற்றும் விசுவாசிகள் யாவரும், அடுத்த அஸ்திபாரக்கற்கள், ஜீவனுள்ள கற்கள் என்று அறிகிறோம். மத் 16:18. 1கொரி 3:11-14. எபே 2:19-22. 1பேதுரு 2:4-6. திருச்சபையாகிய புதிய எருசலேமுக்கு பன்னிரண்டு அஸ்திபாரக்கற்கள் இருக்கிறது. வெளி 21:14. இவர்கள் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள். இயேசு கிறிஸ்து இவர்களுக்கும் முக்கிய மூல அஸ்திபார கல்லாயிருக்கிறார்.

விக்கிரக ஆராதனை
(A) மேலும் ரோமசபையின் விக்கி;ரக ஆராதனையும் பரிசுத்தவான்கள், மரியம்மாள் வணக்கமும், மரித்துப்போனவர்களுக்காக செய்யும் பிராத்தனை ஜெபங்களும், பாவ அறிக்கையும், உத்தரிக்கும் ஸ்தல உபதேசமும், நற்கருணையில் சபையாருக்கு ரசம் கொடாததும், குருக்களுக்கு விவாக தடையும், குழந்தைகளுக்கு ஞானஸ்நானமும், குருக்களின் அதிகாரமும், வேதாகம உபதேசத்திற்கு நேர்விரோதமானது. மிகுந்த குழப்பமான உபதேசங்கள் நிறைந்துள்ள ரோம சபையை, வேதத்தில் “மகா பாபிலோன்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
திரியேகதேவன்
(B) இவர்களை விட்டுப்பிரிந்து வந்த புராட்டெஸ்டென்ட் சபைகளில் இன்னும் ரோம சபையில் போதிக்கப்படும். திரியேகதேவன், சாகாத ஆத்துமா, நித்திய எரிநரகம், என்பவைகளும் தப்பிதமான உபதேசங்கள். சத்தியத்தைக் கேட்டு விசுவாசிக்கிறவர்களுக்கு முழுக்கு ஸ்நானம் கொடுக்கப்பட்டது. மத் 28: 19,20. மாற்கு 16:15,16. குழந்தைகளின் ஞானஸ்நானம் தப்பான உபதேசம்.
ஏழாம் நாள் சபை
(C) பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவன் இஸ்ரயேலருக்கு ஏழாம் நாள் ஓய்வை கட்டளையாக கொடுத்தார். இது எல்லா புறஜாதியாருக்கும் கொடுக்கப்படவில்லை. யாத் 20:8-10. சங் 147:19,20. இந்த ஓய்வு, இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வரப்போகும், உலக இளைப்பாறுதலுக்கு ஓர் முன் அடையாளமாயிருந்தது. ஆதலால் புதிய ஏற்பாட்டில் புறஜாதிகளிிலிருந்து வந்த கிறிஸ்தவர்களுக்கு, ஏழாம் நாள் ஓய்வு ஓர் கட்டளையாகக் கொடுக்கப்படவில்லை. போஜனத்தையும, பானத்தையும்;, குறித்தாவது, பண்டிகை நாட்களையும், மாதப்பிறப்பையும், ஓய்வு நாட்களையும் குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தா திருப்பானாக : அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது : அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினதென்று அப்.பவுல் அறிவிக்கிறார். கொலோ 2:16,17. கலா. 4:9,10 ரோமர் 14:5,6. ஆதலால் சனிக்கிழமை ஓய்வு நாளை அனுசரிக்க, ஏழாம் நாள் சபையார் உபதேசிப்பது நியாயமல்ல, திருச்சபையார் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகள் அல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். கலா 3:10-13. யாக் 2:10. கலா 5:14. ரோமர் 10:4.5.
அந்நிய பாஷை
(D) பெந்தேகோஸ்தே சபையார், ஆவியால் ஏவப்பட்டு பல பாஷைகளைப் பேசுவதாக கூறுவதும் பெருந்தவறு.
தேவன் தனக்கென்று தெரிந்து கொண்ட இஸ்ரயேலரிடம், அவர்களுடைய எபிரேய பாஷையிலே பேசினார். பழைய ஏற்பாடும் எபிரேய பாஷையில் எழுதப்பட்டது. இஸ்ரயேலர் புறஜாதியார்களிடம் எவ்வித தொடர்பும் வைக்கக்கூடாதென்று தேவக்கட்டணை இருந்தது. உபா.7:1-7. புதிய ஏற்பாட்டின் கால துவக்கத்தில், அப்போஸ்தலர்கள் முதல் முதலாக புறஜாதியாருடன் சுவிசேஷத்தை அறிவிக்க பல பாஷைகள் பேசும் வரம் பெற்றார்கள். அவற்றை கேட்ட புறஜாதியார் தேவ ஏற்பாட்டை அறிந்து கொண்டார்கள். சில சமயங்களில் அவைகள் மொழிப்பெயர்க்கப்பட்டு சபையாரக்கு அறிவிக்கப்பட்டது : அப் :4:12. 1கொரி. 14-;ம் அதிகாரம் தேவனுடைய மிகுந்த கிருபையால், தற்காலங்களில் வேதாகமம் 1250 பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்தந்த பாஷையிலே, சத்திய வசனத்தைப் போதிப்பவர்களுக்கு எழுதப்பட்டுமிருக்கிறது. ஆதலால் பாஷைகளின் வரம், விசேஷமாய் ஆதித்திருச்சபையாருக்கு கொடுக்கப்பட்டது. “அந்நிய பாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசி களுக்கு அடையாளமாயருக்கிற” தென்றும், “அந்நிய பாஷைகளானாலும் ஒழிந்து போம்.” என்றும் அப்.பவுல் கூறினார். 1கொரி 13:8. 14:22 விசுவாசிகளான ஓர் மலையாளக் கூட்டத்தில் இன்னொரு மலையாள விசுவாசி, யாருக்கும் தெரியாத ஓர் அந்நிய பாஷையில் பேசுவது என்ன பிரயோஜனமாயிருக்கும்? மேலும் பெண்கள் சபையில் பேசக்கூடாது என்றும்: வீணான வார்த்தைகளால் நீண்ட ஜெபம்செய்யக்கூடாத தென்றும், சபையில் ஒழுங்கான முறைகள் இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்க, பெந்தேகொஸ்தே சபையார், இவைகளுக்கு நேர் விரோதமாய் செய்து வருகிறார்கள். மத் 6:7. பிர.5:2. 1கொரி 14:33,34.
விவாகம்
இவர்களில் சிலர் பிசாசுகளின் உபதேசத்தைப் பின்பற்றி, விவாகம் பண்ணாதிருக்கவும், விவாகம் செய்துள்ள புருஷன் மனைவியை, தேவ ஊழியத்துக்கென்று பிரிக்கப்பட வேண்டுமென்றும் சொல்லி, அநேக சமாதானமான குடும்பங்களை கலைத்துப் போடுகிறார்கள். 1தீமோ4:1-2. 1கொரி 7:5. இச்சபையில் அநேக இளவயதான பெண்கள், மற்றும் சில விதவைகள் வெண் வஸ்திரம் தரித்துக்கொண்டு, சோம்பேரிகளாய் வீடுவீடாய் திரிந்து வீணாக அலப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தீர்க்க தரிசனம் அற்புதம்
அநேகர், இயேசு கிறிஸ்துவை அனுப்பிய பிதாவானவர் யாரென்றும், அவருடைய சித்தத்தையும் அறியாதவர்களாய் “இயேசுவே, கர்த்தாவே” என்று சொல்லிக்கொண்டு,அவருடைய நாமத்தை வைத்துக்கொண்டு தீர்க்க தரிசனம் சொல்லுவதாகவும், பிசாசுகளை துரத்துவதாகவும், அநேக அற்புதங்களை செய்வதாகவும் சொல்லி, அநேக மக்களை ஏமாற்றிவரும் அக்கிரம செய்கைக்காரராய் இருக்கிறார்கள். மத் 7:21-23.

வேறு சில கள்ளப்போதகர்களைக் குறித்து இவ்வாறு கூறப்படுகிறது :- “அவர்களுடைய தேவன் வயிறு தான்”.பிலிப் 3:19 என்றும் இப்படிப்பட்ட காவற்காரர்களை, குலைக்கமாட்டாத ஊமையும் பெருவயிற்று நாய்கள் என்றும், ஏசா 56:10-12. இப்படிப்பட்ட நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றும் பிிலி 3:2.இல் கூலியாட்களைப்போல பணத்துக்கும், அவலட்சணமான ஆதாயத்திற்கும் பிரசங்கம் செய்து கொண்டு திரிகிறவர்களும் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. மீகா 3:11.1 பேதுரு 5:1-3. மேலும் இப்படிப்பட்டவர் களைக்குறித்து “மேய்ப்பர்களே அலருங்கள். சாம்பலில் புரண்டு கதருங்கள். நீங்கள் வெட்டப்படவும், சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின. உச்சிதமான பாத்திரம் போல் விழுந்து நொறுங்குவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரே 25:34-38.

இராப்போஜனம் தேதி
இஸ்ரயேலின் 12 மாதங்களின் பெயர்கள்

ஆபிப் யாத் 12: 1-2, 13:4 ஆங்கிலேய மாதம்
அல்லது நீசான் எஸ்தர் 3:7 துவக்கம் மார்ச் 22
சீப் 1 இராஜா 6:1 துவக்கம் ஏப்ரல் 22
சீவான் எஸ்தர் 8:9 “ மே 20
தம்மூச்சு எசே 8:14 “ ஜீன் 19
ஆப் எஸ்றா 7:9 “ ஜ{லை 18
எலூல் நெகேமி 6:15 “ ஆகஸ்ட் 17
ஏத்தானீம் 1 இராஜா 8:2 “ செப். 15
பூல் 1 இராஜா 6:38 “ அக்டோ 15
கிஸ்லே சகரியா 7:1 “ நவம்பர் 13
தேபேத் எஸ்தர் 2:16 “ டிசம்பர் 13
சேபாத் சகரியா 1:7 “ ஜனவரி 11
ஆதார் எஸ்தர் 3:7 “ பிப்ரவரி 10

யூத மாத கணக்கின்படி இயேசுவின் பிறந்த நாள் அக்டோபர் 2 தேதி
ஆபிப்:14. இயேசுகிறிஸ்து நியமித்த இராப்போஜனம் அந்த தேதிக்கு கணக்கிடப்படவேண்டும்.

தவறான வேதாகம கால கணக்குகள்

ஆதாமின் சிருஷ்டி முதல் சேத்
பிறக்கும் வரை - 130 வருஷம் ஆதி 5:3.
சேத் முதல் ஏனோஸ் - 105 “ “ 5:6
ஏனோஸ் முதல் கேனான் - 90 “ “ 5:9
கேனான் முதல் மகலாலெயேல் - 70 “ “ 5:12
மகலாலெயேல் முதல் யாரேத் - 65 “ “ 5:15
யாரேத் முதல் ஏனோக்கு - 162 “ “ 5:18
ஏனோக்கு முதல் மெத்தூசலா - 65 “ “ 5:21
மெத்தூசலா முதல் லாமேக்கு - 187 “ “ 5:25
லாமேக்கு முதல் நோவா - 182 “ “ 5:28,29
நோவாவின் பிறப்பு
ஆதாம் முதல் ஜலப்பிரளயம் வரை - 600 “ “ 7:6.
1656 வருஷங்கள்
ஜலப்பிரளயம் முதல் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்யும் வரை.
ஜலப்பிரளயத்திலிருந்து அர்பக்சாத் பிறப்பு வரை 2ஆதி 11:10
அர்பக்சாத் முதல் சாலா “ 35 “ 11:10
சாலா “ ஏபேர் “ 30 “ 11:14
ஏபேர் “ பேலேகு “ 34 “ 11:16
பேலேகு “ ரெகூ “ 30 “ 11:18
ரெகூ “ செரூகு “ 32 “ 11:20
செரூகு “ நாகோர் “ 30 “ 11:22
நாகோர் “ தேராகு “ 29 “ 11:24
தேராகு முழுவயது 205 “ 11:32
தேராகு மரித்த பிறகே தேவன் ஆபிரகாமை அழைத்து அவருடன் உடன்படிக்கை செய்தபடியால், ஜலப்பிரளயத்திலிருந்து ஆபிரகாமுடன் தேவன் உடன்படிக்கை செய்து கொண்ட காலம் வரை. 427 வருக்ஷங்கள்
ஆபிரகாமிடம் செய்த உடன்படிக்கையிலிருந்து மோசேயின் மூலம் நியாயப்பிரமாணம் கொடுக்கும் வரை 430 வருஷங்கள் என்று அப்பவுல் கூறுகிறார் கலா3:17.430வருஷங்கள்
இஸ்ரயேலர் எகிப்து தேசத்தை விட்டது முதல் சீனாய் மலையை விடும்வரை எண் 10:11-12:33:3. 1வருக்ஷம்
பரான் வனாந்தரத்திலிருந்து வேவுக்காரர்கள் அனுப்பப்பட்ட போது வேவுகாரரில் ஒருவரான காலேபின் வயது 40, பிறகு 40 வருஷங்கள் வனாந்திர பிரயாணம் முடிந்து, கானான் தேசம் பங்கிடப்படும்போது கலேபின் வயது 85. ஆதலால் பாரான் வனாந்திர பிரயாணம் முதல் கானான் தேசம் பங்கிடப்படும் வரை(எண் 13:3-6 32:8-13 யோசுவா 11:23. 14:6-10) 45 வருஷங்கள்.

நியாயாதிபதிகளின் காலம் அப். 13:19-21. 450 வருஷங்கள்.
இராஜாக்களின் காலங்கள் -
சவுல் அப் 13: 21 40 வருஷங்கள்
தாவீது 1 நாளா 29:27 40 “
3 சாலொமோன் 2 நாளா 9:30 40 “
4 ரேகாபெயாம் “ 12: 13 17 “
5 அபியா “ 13:2 3 “
6 ஆசா “ 16:13 41 “
7 யோசபாத் “ 20:31 25 “
8 யோராம் “ 21:20 8 “
9 அகசியா “ 22:2 1 “
10 அத்தலியாள் “ 22:12 6 “
11 யோவாஸ் “ 24:1 40 “
12 அமத்சியா “ 25:1 29 “
13 ஊசியா “ 26:3 52 “
14 யோதாம் “ 27:1 16 “
15 ஆகாஸ் “ 28:1 16 “
16 எசேக்கியா “ 29:1 29 “
17 மனாசே “ 33:1 55 “
18 ஆமோன் “ 33:21 2 “
19 யோசியா “ 34:1 31 “
20 யோயாக்கீம் “ 36:5 11 “
21 சிதேக்கியா “ 36:11 11 “
இராஜாக்களின் காலம் 513 வருக்ஷங்கள்

பாபிலோன் தேசத்தில் அடிமைத்தனமும் சிறையிருப்பும், 2 நாளா 36: 20-23 70 வருக்ஷங்கள்
பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுதலையடைந்து கோரேஸ் ராஜாவின் முதலாம் வருக்ஷம் முதல் இயேசு கிறிஸ்துவின் பிறப்புவரை 536 வருக்ஷங்கள் இந்த வருக்ஷக்கணக்கு சரித்திரங்களின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது. 536 வருக்ஷங்கள்
இந்த எல்லா பாகங்களையும், மொத்தமாய் கூட்டிக்கணக்கிடும் போது : ஆதாமின் சிருக்ஷ்டிப்பு முதல், இயேசுகிறிஸ்துவின் பிறப்பு வரை 4128 வருக்ஷங்கள் என்று அறிகிறோம். 4128 வருக்ஷங்கள்

கி.பி.1872யில் ஆதாம் முதல் 6000 வருக்ஷங்கள் முடிந்து விட்டது.
கி.;மு.4128 + கி.பி 1872 =6000.
ஆதாம் முதல் கி.பி.1968 வரை : (4128 + 1968) =6096 வருக்ஷங்கள்
கி.பி.2024 வரை : (4128 + 2005) = 6152 வருக்ஷங்கள்

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மாம்ச சரீரத்தில் வரப்போவதில்லை

இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் மாம்ச சரீரத்தில் மரித்து ஆவிக்குரிய மகிமையான சரீரத்தில் எழுப்பப்பட்டு பரலோகத்திற்குச்சென்றார். 1பேது 3:18. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். என்று இயேசு கிறிஸ்து தமது சீஷருக்குச் சொன்னார். யோவான் 14:19. நாங்கள் கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும்,இனி ஒரு போதும் அவரை (கிறிஸ்துவை) மாம்சத்தின்படி, அறியோம் என்று அப்.பவுல் கூறினார். 2கொரி 5:16. இதனால் இயேசு கிறிஸ்து தன்னுடைய இரண்டாம் வருகையில் உலகத்தார் யாவரும் காணத்தக்கதாய் மாம்ச சரீரத்தில் வரப்போவதில்லை என்று அறிகிறோம்.
இயேசுகிறிஸ்து தம்முடைய மகிமையான (ஆவிக்குரிய) சர்ீரத்தில் வரும்போது, அவருடைய திருச்சபையார் மாத்திரமே தாங்கள் மறு ரூபமாக்கப்டும் சரீரத்தில் அவரைக்காண்பார்கள் என்று அறிகிறோம். 1கொரி 15:51, 52, பிலிப் 3:20,21.1 யோவான் 3:2, “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்: நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்”. என்றபடி நிறைவேறும் சங் 17:15. அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். 1யோவா 3:2.